இந்த வருடத்தின் இறுதிக்குள் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் நடைபெறுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்துரைத்த போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா இதனை தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெறவுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
அத்துடன் மாகாண சபை தேர்தலை நடத்துவதாயின் காணப்படும் சட்டப்பிரச்சினைகளை நாடாளுமன்றம் ஊடாக நிவர்த்தி செய்ததன் பின்னரே தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கப் பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா தொற்றுக்கான அச்சம் காணப்படுகின்ற நிலையில், அதற்கான சுகாதார வழிகாட்டுதல்களை பின் பற்றி தேர்தல்கள் முன்னெடுக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
