சமூர்த்தி கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பம்

சமூர்த்தி கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கைகள் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவு 28 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஒரு இலட்சத்து 76 ஆயிரம் சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவினை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், இதுவரை 3 ஆயிரத்து 500 ரூபா பெற்ற குடும்பத்திற்கு 4 ஆயிரத்து 500 ரூபாவும், 2 ஆயிரத்து 500 ரூபா பெற்றகுடும்பத்தினருக்கு 3 ஆயிரத்து 200 ரூபாவும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும்குறிப்பிட்டார்.

மேலும், ஆயிரத்து 500 ரூபா பெற்ற குடும்பம் ஒன்றிற்கு ஆயிரத்து 900 ரூபாவினைவழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் சமுர்த்தி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கதெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் 15 ஆயிரம் மில்லியன் ரூபா மேலதிகசெலவை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை