ஊடக அடக்குமுறைக்கு எதிராக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு

ஊடக அடக்குமுறைக்கு எதிராக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் சனிக்கிழமை  05-03-2022ஆம் திகதி காலை 10 மணி அளவில் மட்டக்களப்பு  காந்தி பூங்கா முன்பாக நடைபெறவுள்ள குறித்த போராட்டத்திற்கு ஊடகவியலாளர்கள் சிவில் சமூக அமைப்புக்கள் அரசியல் வாதிகள் மற்றும் நலன்விரும்பிகள் என அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஏற்பாடு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மட்டு ஊடக அமையம் மட்டக்களப்பு ஊடகவியலாளர் தொழிற்சங்கம் குறித்த போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்வதோடு அண்மைக்காலமாக இலங்கையில் நடக்கும் ஊடக அடக்குமுறைக்கு ஊடகவியலாளர்கள் தாக்கப்படுகின்றமைக்கும் தங்களது கண்டனங்களை தெரிவித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
புதியது பழையவை