நாடளாவிய ரீதியில் மக்கள் சந்திப்பு – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

அரசியல் மற்றும் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பில் மக்களை தெளிப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் மக்கள் சந்திப்புகளை முன்னெடுப்பதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.

இதன் முதலாவது மக்கள் சந்திப்பு அனுராதபுரத்தில் எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றம் நிதி அமைச்சர் பெஸில் ராஜபக்ஸ ஆகியோர் உள்ளிட்ட பலர் இந்த சந்திப்பில் கலந்துக்கொள்ள உள்ளனர்.

கொரோனா தொற்றை வெற்றிக்கொள்வதற்காக அரசாங்கம் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள், ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு, அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் தேர்தல் திட்டங்கள் என்பன தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  
புதியது பழையவை