கிழக்கு மாகாண சபையின் கீழ் இயங்கும் அனைத்து நிறுவனங்களும் தமது மின்சார பாவனையை 50 வீதத்தால் குறைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் வலியுறுத்தியுள்ளார்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அனைத்து மாகாண அரசாங்க அமைப்புகளின் தலைவர்களுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் இதனை அறிவித்துள்ளார்.
அனைத்து மாகாண அரசாங்க நிறுவனங்களின் மின்சாரக் கட்டணத்தை குறைந்தபட்சம் 20% மற்றும் அதிகபட்சமாக 50% குறைக்க உடனடி யாக நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து ஆளுநர்களுக்கும் நிதியமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ள நிலையில், மின் பாவனையைக் குறைக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
