தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதைத் தவிர்ப்பதற்கான முன்மொழிவை கல்வி தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு நிராகரித்துள்ளது.
வெட்டுபுள்ளி மதிப்பெண்களை வெளியிடுவது பெற்றோருக்குத் தங்கள் விருப்பப்படி குழந்தைகளுக்கான பாடசாலையைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பளிக்கிறது என குழுவிலுள்ள பெரும்பான்மையானவர்கள் தெரிவித்துள்ளனர்.
முடிவுகளை எதிர்பார்க்கும் மாணவர்களின் நம்பிக்கையை தணிக்கக் கூடாது என்றும் குழு தெரிவித்துள்ளது.
