நிலவும் எரிபொருள் நெருக்கடி ஏப்ரல் 5 ஆம் திகதி வரை தொடரலாம் என போக்குவரத்து அமைச்சரான திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
எரிபொருள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் எரிபொருள் தட்டுப்பாடு தொடரும்.
ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகம் எதிர்வரும் 5ஆம் திகதி வரை கட்டுப்பாடுகளுடன் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்றைய தினம் இறக்கப்பட வேண்டிய 37,000 மெட்ரிக் தொன் எரிபொருள் சில காரணங்களால் இறக்கப்படவில்லை எனவும், அடுத்த சில நாட்களுக்கு பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்தியாவினால் வழங்கப்படும் கடன் கீழ் எரிபொருளுடன் வரும் கப்பல்களின் அட்டவணையை ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் அரசாங்கம் பெற்றுக்கொள்ளும்.
கடன் கீழ் தேவைப்படும் எரிபொருள் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் நாட்டிற்கு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
