நாட்டில் நாளைய தினம் 7 மணித்தியாலத்திற்கும் அதிகமான காலப்பகுதிக்கு மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த விடயத்தை இன்று அறிவித்துள்ளது.
இதற்கமைய காலை வேளையில் 5 மணித்தியாலமும் மாலை வேளையில் 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

