ஆதியும் அந்தமும் இல்லாத பராபர வஸ்து ஜோதி ஸ்ரூபத்திலிருந்து லிங்கமாக வெளிவந்து அருள்புரிந்த சிவராத்திரி நன்நாள் இன்றாகும்.
சிவனுக்குரிய விரதங்களுள் சிறப்புமிக்க ஒன்றான சிவராத்திரி விரதம், வல்லமையும் மகத்துவமும் நிறைந்து அடியார்களுக்கு மன அமைதியை தருவதால் மகா சிவராத்திரி என அழைக்கப்படுகின்றது.
இந்த நிலையில், சிவராத்திரி விரதத்தை சுகாதார விதிமுறைகளுக்கமைய அனுஷ்டிக்குமாறு பிரதமரின் இந்து மத விவகாரங்களுக்கான இணைப்பாளர் கலாநிதி இராமச்சந்திரக் குருக்கள் பாபு சர்மா அறிவுறுத்தியுள்ளார்.
