அந்தமான் - நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்!

அந்தமான் - நிகோபார் தீவுகளிலுள்ள திக்லிபூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று காலை 8.58 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 4.1ரிச்டர் அளவுகளாகப் பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கம் திக்லிபூரில் இருந்து தென் கிழக்கே 225 கிலோமீட்டர் தொலைவில் உணரப்பட்டுள்ளது. ஆயினும் எந்தவிதமான சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை