மின் தடை குறித்து சற்று முன் வெளியான தகவல்

எரிபொருள் இருப்புக்கள் உரிய முறையில் கிடைக்கப்பெறுமாயின்  நாட்டில்  மின்தடை அமுலாகும்  காலப்பகுதியில் இன்று முதல்  மாற்றம் ஏற்படுத்தப்படும்  என  பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி எரிபொருள் கையிருப்புகளின் அடிப்படையில் திட்டமிட்ட மின்தடையினை  இடைநிறுத்தல் அல்லது குறைப்பதற்கு  நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன்  மின்தடை அமுலாகும் காலப்பகுதி இன்று முதல் குறைவடையும் என அரசாங்கம்  வாக்குறுதி வழங்கியிருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாடளாவிய ரீதியில் இன்றும் திட்டமிட்ட மின்தடை அமுல்படுத்தப்படும் என  பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை