நாளைய தினம் மின்துண்டிப்பு - வெளியான அறிவிப்பு

நாட்டில் நாளைய தினம்(15) மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.

அதன்படி, A, B, C, D, E, F, G, H ஆகிய வலயங்களிற்குட்பட்ட பிரதேசங்களுக்கு நாளை காலை எட்டு மணி தொடக்கம் மாலை ஆறு மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டரை மணித்தியாலங்களும், மாலை ஆறு மணி தொடக்கம் இரவு பதினொரு மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் P, Q, R, S, T, U, V, W ஆகிய வலயங்களிற்குட்பட்ட பிரதேசங்களுக்கு காலை ஒன்பது மணி தொடக்கம் பிற்பகல் ஐந்து மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டு மணித்தியாலங்களும், மாலை ஐந்து மணி தொடக்கம் இரவு ஒன்பது மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
புதியது பழையவை