வவுனியாவில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த வவுனியா ஊடகவியலாளரின் புகைப்படக்கருவி அடித்து சேதமாக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா - குருக்கள் புதுகுளம் பகுதியில் நேற்று (06) காலை இடம்பெற்ற விபத்தில் தந்தை சம்பவ இடத்திலேயே பலியாகியதுடன், மகன் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்திருந்தார்.
இதனையடுத்து ஆவேசம் அடைந்த குறித்த பகுதி மக்கள் பேருந்தினையும் தாக்கியிருந்தனர். குறித்த சம்பவத்தினை செய்தி சேகரித்துக் கொண்டிருந்த வவுனியா மாவட்ட ஊடகவியலாளரின் 1,40,000 ரூபா பெறுமதியான புகைப்படக் கருவியினை குறித்த பகுதி மக்கள் பறிக்க முற்பட்டதோடு, புகைப்படக் கருவியினையும் அடித்துச் சேதப்படுத்தியுள்ளார்கள்.
இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளரான இராசையா ஜெயசங்கரால் பூவரசங்குளம் பொலிஸில் முறைப்பாடொன்றினை பதிவுசெய்துள்ளார்.
முறைப்பாடு வழங்கப்பட்டதையடுத்து இது தொடர்பில் பூவரசங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.



