நாட்டில் எரிபொருள் பற்றாக்குறைக்கு அரசியல் வாதிகளின் மேடைப் பிரசாரங்களே காரணம் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
நாராம்மல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்துரைத்த போதே பிரதமர் மகிந்த ராஜபக்ச இதனை தெரிவித்தார்.
எதிர்வரும் 3 அல்லது நான்கு நாட்களுக்கு மாத்திரமே எரிபொருள் காணப்படுவதாக அரசியல் வாதிகள் மக்களை அச்சம் கொள்ள செய்தமையினால் எரிபொருள் அதிகளவில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இதனாலேயே எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு முன்னால் வரிசைகளும் உருவாகின என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
வழமையை போன்று எரிபொருள் கொள்வனவுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றமையினால் நாட்டில் ஒரு போதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது என பிரதமர் மேலும் தெரிவித்தார்.
