நாட்டில் நாளைய தினமும் மின் விநியோகத் தடை - வெளியான அதிரடி அறிவிப்பு

நாட்டில் நாளைய தினமும் (14)மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய நாளைய தினம் மொத்தமாக 7 மணித்தியால மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த நிலையில், A முதல் L வரையிலான வலயங்களிலும் P முதல் W வரையிலான வலயங்களிலும் 5 மணித்தியால மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதிக்குள் இவ்வாறு மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதிக்குள் 2 மணித்தியால மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை