பாடசாலை மாணவர்களுக்கான ‘சுரக்ஷா ’ காப்புறுதித் திட்டம் இடைநிறுத்தப்பட்டமை மிகவும் கவலைக்குரியது என இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) தெரிவித்துள்ளது.
3.3 மில்லியன் மாணவர்கள் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு பகுதியாக இருந்த நிலையில், இது நிறுத்தப்பட்டதாக சங்கத்தின் பிரதம செயலாளரான ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
காப்பீட்டுத் திட்டத்திற்கான ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை என்றும், இதுவும் நிலவும் நெருக்கடியின் விளைவாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மாணவர்களுக்கான உணவுத் திட்டமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், மாணவர்களுக்கு வழங்கப்படும் அன்றாட வசதிகள் குறைக்கப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.
