நாட்டில் இன்றைய தினமும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், A முதல் L வரையிலான வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதிக்குள் 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதிக்குள் 1 மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், P முதல் W வரையிலான வலயங்களில் காலை 8.30 முதல் மாலை 5.30 வரையான காலப்பகுதிக்குள் 3 மணித்தியாலம் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 5.30 முதல் இரவு 10.45 வரையான காலப்பகுதிக்குள் 1 மணித்தியாலமும் 45 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
