நாட்டில் இன்றைய தினமும் மின் விநியோகத் தடை

நாட்டில் இன்றைய தினமும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கமைய இன்றைய தினம் 3 மணித்தியாலத்திற்கு அதிகமானகாலம் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, A முதல் L வரையிலான வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதிக்குள் 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதிக்குள் 1 மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், P முதல் W வரையிலான வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையான காலப்பகுதிக்குள் 2 மணித்தியாலம் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதிக்குள் 1 மணித்தியாலம் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
புதியது பழையவை