மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான யோசனை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இலங்கை மின்சார சபை மற்றும் மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோருக்கிடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலேயே இது தொடர்பில் கவனம்செலுத்தப்பட்டுள்ளது.
இதன் போது மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை மின்சார சபையினால் அமைச்சருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இது தொடர்பில் அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்க அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தீர்மானித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் இன்றைய தினமும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதன்படி, A முதல் L வரையான வலயங்களில் மூன்று மத்தியாலமும் 45 நிமிடங்களும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
காலை 9 மணி முதல் இரவு10 மணி வரையான காலப்பகுதியில் இவ்வாறு மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், P முதல் W வரையான வலயங்களில் இரண்டு மணிநேர மின் விநியோகத்தடை அமுலபடுத்தப்படவுள்ளது.
குறித்தப் பகுதிகளில் பிற்பகல் 3 மணி முதல் 11 மணிவரையான காலப்பகுதியில் இவ்வாறு மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் அறிவித்துள்ளது.
