கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருடன் விசேட சந்திப்பு

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்றைய தினம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பெச்லெட்டுடன் விசேட சந்தித்திப்பில் ஈடுபட்டுள்ளார்.

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் இடம் பெற்று வரும் போது இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்புக்கு முன்னதாக நேற்றுமுன்தினம், வத்திகானில் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பரிசுத்த பாப்பரசரை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை