கிளிநொச்சி இரணைமடு அம்பாள்நகர் பகுதியில் நேற்று மாலை 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரணைமடு பகுதியிலிருந்து A9 வீதி நோக்கி பயணித்த ஐஸ்கிறீம் வண்டியுடன் எதிரே பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி திருவையாறு பகுதியை சேர்ந்த பத்மநாதன் சஞ்ஜீவன் எனும் 29 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிபவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

