திருகோணமலை- சம்பூரில் சூரிய சக்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆலையை நிறுவுவதற்கான கூட்டு முயற்சிக்கான உடன்படிக்கையில் இந்தியாவும் இலங்கையும் கைச்சாத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை மின்சார சபையும் இந்தியாவின் தேசிய அனல் மின்சார கூட்டுத்தாபனமும் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளன.
இது தொடர்பான கலந்துரையாடல்கள் கடந்த காலங்களில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்று வந்தநிலையில் தற்போது அது உடன்படிக்கை வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது.
