இலங்கை மின்சார சபைக்கு தேவையான அனைத்து வகையான எரிபொருளை வழங்கப்படும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க இதனை தெரிவித்துள்ளார்
இதேவேளை, நாட்டில் இன்றைய தினமும் சில பகுதிகளில் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படுமென பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, a , b மற்றும் c ஆகிய வலயங்களில் மாத்திரம் இன்றைய தினம் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த நிலையில், குறித்த வலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 4.30 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மின்விநியோக தடையினை அமுல்ப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த காலப்பகுதியில் 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
