அமெரிக்க பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக இலங்கை தமிழரொருவர் நியமனம்

அமெரிக்காவின் முதன்மை பல்கலைக்கழகமொன்றில் உதவிப் பேராசிரியராக தமிழரொருவர் நியமனம் பெற்றுள்ளார்.

யாழ்.நயினாதீவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு அமெரிக்க முதன்மைப் பல்கலைக்கழகமொன்றில் உதவிப் பேராசிரியராக நியமனம் பெற்றுள்ளார்.

யாழ்.இந்துக்கல்லூரியின் பழைய மாணவனான பாலசுப்பிரமணியம் சாரங்கன் என்பவரே அமெரி்க்காவின் Georgia பல்கலைக்கழகத்தின் புள்ளிவிபரவியல் துறை உதவி பேராசிரியராக நியமனம் பெற்றுள்ளார்.

குறித்த இளைஞரைப் பலரும் பாராட்டி வாழ்த்தி வருகின்றனர்.
புதியது பழையவை