மேல் மாகாண பாடசாலைகளின் பரீட்சைகள் கால வரையரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அச்சுத் தாள்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய 6,7 மற்றும் 8 ஆம் தரங்களுக்கான தவணைப் பரீட்சைகள் பாடசாலை மட்டத்திலேயே நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 9, 10 மற்றும் 11 ஆம் தரங்களுக்கான பரீட்சைகள் கால வரையரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த பரீட்சைகளை எதிர்வரும் ஏப்ரல் மாத விடுமுறைக்குப் பின்னர் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
