நாளை முதல் நாடாளுமன்ற அமர்வுகள்

தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

நாளை முதல் எதிர்வரும் 11ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடவுள்ளதுடன், அறிவுசார் சொத்துரிமை திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு நாளைய தினம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

தொழிலாளர் இழப்பீட்டுத் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 10ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதுடன் அன்றைய தினம் பிற்பகல் எரிசக்தி நெருக்கடி தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இடம்பெறவுள்ளதாக  நாடாளுமன் தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது. 

எதிர்வரும் வாரம் நாடாளுமன்ற அமர்வுகளை  நான்கு நாட்களுக்கு முன்னெடுக்க கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 

இதனடிப்படையில் நாளை முதல் எதிர்வரும் 11 ஆம் திகதி வரையில் நாடாளுமன்றம் கூடவுள்ளதாக  நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை