மக்கள் பட்டினியில் வாடும் நிலை உருவாகியுள்ளது - சுமந்திரன் எம்.பி

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கான பொதுப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும், பட்டினியில் வாடும் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செலயகத்தில் இன்று நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,
பொருளாதார நெருக்கடியால், மக்கள் பட்டினியில் வாடும் நிலை உருவாகியுள்ளது. வடக்கில் இருந்து ஒரே நாளில் 16 பேர் தமிழகம் சென்றுள்ளனர்.

இந்நிலைமை தொடரக்கூடாது. தற்போதைய நிலைமையில் இருந்து மீள்வதற்கான பொறிமுறை அவசியம். அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை