லங்கா ஐஓசி பெற்றோலின் விலைகள் மேலும் அதிகரிப்பு

லங்கா ஐஓசி நிறுவனத்தினால் பெற்றோலின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன,
இதன் படி 49 ரூபாவினால் அனைத்து  வகை பெற்றோலின் விலைகளும் அதிகரிக்கப்படுவதாக லங்கா ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒக்டேன் 92 மற்றும் 95 ரக பெற்றோலின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு மாத காலத்திற்குள் இரண்டாவது தடவையாக பெற்றோலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் ஒக்டேன் 92 ரக பெற்றோலின் புதிய வலை 303 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் ஒக்டேன் 95 ரக பெற்றோலின் புதிய விலை 332 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக பெற்றோலின் விலைகள் 300 ரூபாவை கடந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

கடந்த 15 நாட்களுள் டொலரின் பெறுமதி 290 ரூபாவை அண்மித்துள்ள நிலையிலேயெ இந்த விலை அதிகரிப்பை மேற்கொண்டுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது,
மேலும் ரஷ்யாவிற்கு விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் காரணமா சர்வதேச அளவில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் டீசலின் விலையை அதிகரிக்காதிருக்க தீர்மானித்துள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது.
புதியது பழையவை