ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கிடையில் கலந்துரையாடல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கிடையில்  இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. 

புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடுவதற்கு  விருப்பம் கொண்டுள்ளதாக  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ  நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார். 

அத்துடன் வடமாகாணத்தின் அபிவிருத்தியில் முதலீடு செய்யுமாறு  புலம்பெயர் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடைபெறவுள்ள கலந்துரையாடல் தொடர்பில் அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான உதவி ராஜாங்க செயலர் விக்டோரியா நூலாண்டிடம் விளக்கமளித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதியது பழையவை