தேசிய பேனா விருதைப் பெறும் மட்டக்களப்பு ஊடகவியலாளர் துஷாரா

இலங்கை பத்திரிகை பேரவையின் 22 வது ஆண்டின் தேசிய விருதுக்கு மட்டக்களப்பு மாவட்ட சீலாமுனை பிரதேசத்தை சேர்ந்த ஊடகவியலாளர் (திருமதி) துஷ்யந்தி சுரேஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

அவருக்கான இந்த விருது இன்று (22) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் வழங்கி வைக்கப்படவுள்ளது.

மட்டு.துஷாரா என்ற பெயரில் 2015 ஆம் ஆண்டு ஊடகத்துறைக்குள் உள்நுழைந்து, மக்களுக்கு பயன்தரும் ஆக்கங்கள், அரசியல் ஆய்வுக் கட்டுரைகள், விளையாட்டு மற்றும் அரசியல் செய்திகள், துறைசார்ந்த விஷேட வைத்திய நிபுணர்களின் மருத்துவ நேர்காணல் தொகுப்புக்கள், மூலிகையின் மருத்துவப் பயன்கள் பற்றிய பல விடயங்களை இன்றுவரை தொடராக எழுதி வருகின்றார்.

இலங்கை பத்திரிகை பேரவையின் 22 வது தேசிய விருதுக்காக இவரின் ஆக்கங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, அத்தெரிவில் சிறந்த ஊடகவியலாளராக தெரிவு செய்யப்பட்ட இவருக்கு இந்த தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை