மதில் இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் பலி

அக்குரஸ்ஸ, தீகல பிரதேசத்தில் வீடொன்றின் மதில் உடைந்து விழுந்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் விபத்தில் 5 வயது சிறுவன் ஒருவனும் காயமடைந்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீடு திருத்தும் பணியின் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அக்குரஸ்ஸ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை