மின் தடைக்கு எதிராக மட்டக்களப்பில் கொட்டும் மழையில் தீப்பந்த போராட்டம்

மின்தடைக்கு எதிராக மட்டக்களப்பிலும் நேற்று இரவு(03) தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையில் கொட்டும் மழைக்கு மத்தியில் பெரிய கல்லாறு கோட்டைக்கல்லாறு பாலத்தில் இந்த விழிப்புணர்வு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தற்போது நாட்டில் பரவலாக பல மணிநேர மின்சாரத்தடை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் மக்களின் பாதிப்பை வெளிப்படுத்தும் வகையில் இந்த போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த போராட்டத்தில் பங்கேற்று கருத்து வெளியிட்ட இரா.சாணக்கியன், நாடளாவிய ரீதியில் இந்த போராட்டத்தினை விஸ்தரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, இதேபோன்றதொரு போராட்டம் நேற்றிரவு யாழ்ப்பாணத்திலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.


புதியது பழையவை