மட்டக்களப்பு - வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி, பால்சேனையில் உள்ள வீடு ஒன்றில் கஞ்சா செடி வளர்த்து வந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக வாகரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினையடுத்து குறித்த வீட்டை நேற்று மாலை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது வீட்டில் வைத்து வளர்த்து வரப்பட்ட 5 அடி உயரமான கஞ்சா செடி மீட்கப்பட்டுள்ளது.

