நாட்டில் இன்றைய தினமும் ஏழரை மணித்தியால மின் விநியோகத் தடை

நாட்டில் இன்றைய தினமும் ஏழரை மணித்தியால மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதன்படி, இன்றைய தினம் மேற்கொள்ளப்படவுள்ள மின்விநியோகத் தடைக்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாகவும் மின்சார சபையின் கடமைநேர அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, முற்பகல் 08 மணி முதல் இரவு 11 மணி வரையிலான காலப்பகுதியில் இவ்வாறு மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஈ மற்றும் எப் ஆகிய வலயங்களில் ஏழரை மணித்தியால மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதோடு, ஏனைய வலயங்களில் மூன்று மணித்தியாலங்கள் மாத்திரமே மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
புதியது பழையவை