கொழும்பின் இரண்டு பிரதேசங்களில் இன்றும் இரு வாகனங்கள் தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பு சேதவத்தை பகுதியில் முச்சக்கர வண்டியொன்று திடீரென தீப்பற்றியெரிந்துள்ளது.
எனினும் தீ ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பிரிவு பொலிஸ் அதிகாரியினால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அத்துடன், வாத்துவ மொரந்துடுவ பகுதியிலும் மோட்டார் சைக்கிளொன்று தீப்பற்றியெரிந்துள்ளது.
குறித்த மோட்டார் சைக்கிளில் வருகை தந்தவர் உணவருந்த சென்ற நிலையில் தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
