ஆட்டோ கனரக வாகனத்துடன் மோதி விபத்து


அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் இருந்து ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு உணவு ஏற்றி வந்த ஆட்டோ ஒன்று கனரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவம் இன்று (09) மதியம் பாலமுனை பிரதான வீதியில் பாலமுனை வைத்தியசாலைக்கு முன்னால் இடம் பெற்றுள்ளது.

இந்த விபத்தில் ஆட்டோவை ஓட்டி வந்த வாகனச்சாரதி தெய்வாதீனமாக காயமின்றி உயிர் தப்பியுள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் குறித்து அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


புதியது பழையவை