அரச மற்றும் அரச அனுசரணையுடன் இயங்கும் தனியார் பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் இன்று முதல் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பிலான சுற்றுநிருபம் கல்வி அமைச்சின் செயலாளரினால் வௌியிடப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில், பாடசாலைகளை நடத்திச்செல்வது தொடர்பில் ஏதேனும் சிக்கல் தோன்றினால், வலயக் கல்வி பணிப்பாளரின் அனுமதியின் பேரில் தேவையான அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
இன்று முதல் அனைத்து மாணவர்களும் வழமையான முறையில் பாடசாலைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
