துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்த நபர் மாதிபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் மாதிபொல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
