அமைச்சரவை அமைச்சர்கள் தமது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய அமைச்சர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சற்றுமுன் நியமனம் செய்துள்ளார்.
அதன்படி, நிதி அமைச்சராக அலி சப்ரி, கல்வி அமைச்சராக - தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சராக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.