இலங்கையுடன் எதிர்வரும் சில நாட்களில் இணக்கப் பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்படுமென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நிதி அமைச்சர் பெஷில் ராஜபக்ஷ இந்த மாதத்தின் முதல் பகுதியில் இடம்பெறவுள்ள நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த அமர்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
