நள்ளிரவு 12 மணி முதல் விலை உயர்கிறது

நள்ளிரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வரும்வகையில் எரிபொருட்கள் மீளவும் விலையுயர்கின்றன.

இலங்கை பெற்றோலிய கூட்டத்தாபனத்தின் உயர்மட்ட தகவல்களின் பிரகாரம் 92 ஒக்ரெய்ன் பெற்றோல் 74 ரூபாயாலும், 95 ஒக்ரெய்ன் பெற்றோல் 78 ரூபாயாலும் மண்ணெண்ணெய் 210 ரூபாயாலும், டீசல் 56 ரூபாயாலும் சுப்பர் டீசல் 65 ரூபாயாலும் அதிகரிக்கின்றன.

உலக சந்தையில் டொலரின் பெறுமதி மற்றும் விலை அதிகரிப்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த விலையுயர்வு நடைமுறைக்கு வருகின்றது. 

இந்த விலைச் சூத்திரம் ஒவ்வொரு மாதமும் 24ஆம் திகதி நடைமுறைக்கு வரும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை