ஊடக நிறுவனங்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொடுக்குமாறு கோரிக்கை ..!

ஊடக நிறுவனங்களின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமான எரிபொருளைப் பெற்றுக் கொடுக்குமாறு வெகுசன ஊடக அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இந்த விடயம் தொடர்பான கோரிக்கை வலுசக்தி அமைச்சு மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய ஊடக நிறுவனங்களின் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமான எரிபொருளைப் பெற்றுக் கொடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை