ஜூலை 1 முதல் பஸ் கட்டணங்கள் 30 வீதம் உயர்வு. ஆரம்பக் கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பஸ் கட்டணமும் அதிகரிக்கப்பட வேண்டும் என பஸ் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதற்கமைய, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள், போக்குவரத்து அமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகாரிகளுடன் பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று கொழும்பில் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தினர்.
எனினும் இந்த கலந்துரையாடலின் போது இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, பஸ் கட்டண திருத்தத்திற்கு எதிர்ப்பதாக தெரிவித்து கலந்துரையாடலில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார்.
எனினும், பஸ் கட்டணம் 30 வீதத்தால் உயர்வதாகவும், ஆக குறைந்த கட்டணம் 40 ரூபாவாக உயர்த்தவும் அகில இலங்கை தனியார் பேருந்து சங்க சம்மேளனம் இணக்கம் வெளியிட்டுள்ளதாக அதன் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவ்வாறான இணக்கம் ஏற்படவில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும், இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கமும் தெரிவித்துள்ளன.