அம்பாரை திருக்கோவில் பிரதேசத்தில் போசாக்கு மட்டம் குறைந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இந்தியா தமிழ்நாட்டு அரசினால் வழங்கி வைக்கப்பட்ட பால்மா பொதிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வு திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பி.மோகனகாந்தன் தலைமையில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.
திருக்கோவில் பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட போசாக்கு குறைந்த குழந்தை பிரசவிக்கும் நிலையில் உள்ள சுமார் 164 கர்ப்பிணித் தார்மார்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரியின் சிபாரிசுக்கு அமைவாக திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் இப்பால்மா பொதிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பி.மோகனகாந்தன் மேற்பார்வை குடும்பநல உத்தியோகத்தர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் என பலரும் கலந்து கொண்டு பால்மா பொதிகளை வழங்கி வைத்திருந்தனர்.