எதிர்வரும் திங்கட்கிழமை (04) முதல் மேலும் மூன்று மாவட்டங்களில் ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவையை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
இதன்படி, மாத்தறை, கண்டி மற்றும் வவுனியா மாவட்டங்களில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கிளைகளில் உரிய சேவையை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும்.
