இந்த நிலையில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்றம் காலை 10 மணிக்கு கூடவுள்ளது.
மேலும், தெரிவத்தாட்சி அலுவலர் தம்மிக்க தஸநாயக்க முன்னிலையில், வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில், பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
இந்த நிலையில், இரகசிய வாக்கெடுப்பின் அடிப்படையில் இன்றைய தேர்தல் நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது.
இதேவேளை. கோட்டாபய ராஜபக்ஸ தமது பதவியை இராஜினாமா செய்துள்ளதை தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கே, இவ்வாறு இடைக்கால ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், டளஸ் அழகப்பெருமவுக்கு, நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும், 9 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
மேலும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பும் டளஸ் அழகப்பெருமவுக்கு, ஆதரவு தெரிவிக்க தீர்மானித்ததுள்ளது.
இதில் தமிழ் முற்போக்கு கூட்டமைப்பு டளஸ் அழகப்பெருமவுக்கு, ஆதரவு தெரிவிக்க தீர்மானித்ததுள்ளது.
அத்துடன், ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டகாரர்கள் வலியுறுத்தியுள்ளதின் அடிப்படையில், ஒரு தீர்மானத்தை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, டளஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு தெரிவிக்க ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்க்பட்டுள்ளது.
மேலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் டளஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
அத்துடன், டளஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு தெரிவிக்க ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தீர்மானித்துள்ளது.
மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிப்பதற்கான தீர்மானத்தை நேற்றிரவு மேற்கொண்டுள்ளது.
இதேவேளை, பொதுஜன பெரமுனவின் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் டளஸ் அழகபெருமவுக்கு ஆதரவளிக்க தீர்மாளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அநுரபிரியதர்சன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், மிகவும் தீர்மானம் மிக்க தேர்தலான இன்றைய வாக்கெடுப்பு காணப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
