கொவிட்-19 நோயாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை

கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதாக சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகமான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு பொதுமக்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த நாட்களில் 34, 62, 75 மற்றும் 57 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் நாளாந்தம் 10 முதல் 20 தொற்றாளர்கள் மாத்திரமே பதிவாகியதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
புதியது பழையவை