ஐம்பது கண்ணீர்ப்புகை குண்டுகளுடன் நபர் ஒருவரை பொலிஸார் இராஜகிரிய பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
கடந்த 13ஆம் திகதி பொல்துவ சந்தியில் இடம்பெற்ற போராட்டத்தை கட்டுப்படுத்த கொண்டு வரப்பட்ட கண்ணீர்ப்புகை குண்டுகள் களவாடப்பட்டிருந்தன.
இவ்வாறு களவாடப்பட்ட 50 கண்ணீர்ப்புகை குண்டுகளுடன் நபர் ஒருவரை பொலிஸார் நேற்றைய தினம் ஒபேசேகரபுர பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

