நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு

கம்பஹா நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நால்வர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு காவல்துறை ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த “பாஸ் பொட்டா” என அடையாளம் காணப்பட்ட நபர் உள்ளிட்ட குழுவினர் மீதே இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
புதியது பழையவை