மட்டக்களப்பு - காத்தான்குடி கடற்கரையில் புனித ஹஜ் பெருநாள் தொழுகை

மட்டக்களப்பு காத்தான்குடியில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை இன்று காலை காத்தான்குடி கடற்கரையில் இடம்பெற்றது.

காத்தான்குடி இஸ்லாமிக் சென்றரின் ஏற்பாட்டில் நடைபெற்ற பெருநாள் தொழுகையையும் பெருநாள் குத்பா பிரசங்கத்தையும் மௌலவி அஷ்ஷெய்க் எம்.எம்.மன்சூர் மதனீ நடாத்தினார்.

தொழுகையில் பெருந்திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
புதியது பழையவை